லால்குடி அரசு கல்லூரியில் இன்று கலந்தாய்வு :

லால்குடி அரசு கல்லூரியில் இன்று கலந்தாய்வு :
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்குரிய மாணவர் சேர்க்கைக்கு முதல்கட்ட கலந்தாய்வு இன்று(ஆக.25) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கி.மாரியம்மாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்குரிய இளநிலை (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.காம்., பிஎஸ்சி, கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், தகவல் தொழில்நுட்பவியல்) பாடப்பிரிவுகளுக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆக.25-ம் தேதியும்(இன்று), இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆக.27-ம் தேதியும் நடைபெறும். தொடர்ந்து செப்.3-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இதுவரை இளநிலை பாடப்பிரிவில் சேர விண்ணப்பிக்காத மாணவர்கள் கல்லூரிக்கு நேரில் வந்தோ அல்லது www.tngasa.ac.in மற்றும் www.tngasa.org ஆகிய இணையதள முகவரியிலோ செப்.3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும், முதுநிலை (எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கிலம், எம்.காம், எம்எஸ்சி, கணினி அறிவியல்) பாடப்பிரிவுகளுக்கு www.tngasapg.in மற்றும் www.tngasapg.org ஆகிய இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம். விண் ணப்பிக்க செப்.1-ம் தேதி கடைசி நாளாகும்.

இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் கல்லூரிக்கு நேரில் வந்தும் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in