அரசு ஐடிஐ-ல் நேரடி சேர்க்கை :

அரசு ஐடிஐ-ல்  நேரடி சேர்க்கை   :
Updated on
1 min read

தென்காசி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், பொருத்துநர், மின்சாரப் பணியாளர், கம்பியாள், மெக்கானிக் டீசல், பற்றவைப்பவர் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள பயிற்சியாளர் இடங்களை நிரப்ப நேரடி சேர்க்கை இன்று (25-ம் தேதி) முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

நேரடி சேர்க்கைக்கு வரும்விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, ஜாதி சான்றிதழ், 2 புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

நேரடி சேர்க்கை தமிழக அரசின் இடஓதுக்கீடு அடிப்படையில் நிரப்பபடும். மேலும் விவரங்களுக்கு 04633 277962 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். வீரகேரளம்புதூர், கடையநல்லூர் அரசு ஐடிஐ அலுவலகங்களிலும் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது என்று, தென்காசி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வெங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in