

சிவகங்கை அருகே நாலுகோட்டை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அங்குள்ள அதிகுந்த வரத அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்சினை உள்ளது. இதையடுத்து ஒருதரப்பைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டோர் திருவிழாவை நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியை சந்திக்க அலுவலகம் முன் காத்திருந்தனர். அப்போது மூதாட்டி விசாலாட்சி திடீரென சாமி ஆடியதுடன், அருள் வாக்கும் கூறினார்.