Regional01
அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு :
புதுக்கோட்டை ஒன்றியக் குழுத் தலைவர் சின்னையா. இவர், அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தார். அதன்பிறகு, சின்னையா தலைமையில் ஒன்றியக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அப்போது, சின்னையா தன்னிச்சையாக அரசு நிதியை செலவிடுகிறார், அதிமுகவில் இருந்து விலகியதால் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி கூட்டத்தில் இருந்து அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
