

பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரியைச் சேர்ந்த மகாராஜன் என்பவரது மகன் குளத்தூர் மணி (31). கூலித் தொழிலாளியான இவர், நேற்று காலை இருசக்கர வாகனத்தில் கீழப்பாவூர் அருகே சென்றபோது, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீது மோதி கீழே விழுந்தார். பலத்த காயம்அடைந்த குளத்தூர் மணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.