மலேசியாவில் இறந்த - தொழிலாளி உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை :

மலேசியாவில் இறந்த -  தொழிலாளி உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை :
Updated on
1 min read

மலேசியா நாட்டுக்கு வேலைக்குச் சென்று, உடல்நலக்குறைவால் உயிரிழந்த கமுதி தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக்கோரி உறவினர்கள் ராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பம்மனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் பாலமுருகன் (43). இவரது மனைவி மாலதி, மகள்கள் முத்துவனிதா (23), காளீஸ்வரி(18), மகன் யோகேஸ்வரன்(21). பாலமுருகன், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மலேசியா நாட்டுக்கு வேலைக்குச் சென்றார். அங்கு ஜொகூர் மாநிலம் சிகாமட் என்னும் இடத்தில் கட்டிடப் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 19-ம் தேதி உடல்நலக்குறைவால் அவர் இறந்துவிட்டதாக அவருடன் பணியாற்றும் நண்பர்கள், பாலமுருகனின் குடும்பத்தின ருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முதுகுளத்தூர் அருகே பொதிகுளம் கிராமத் துக்கு வந்திருந்த ராமநாதபுரம் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலாவிடம் பாலமுருகனின் உறவினர்கள் மனு அளித்தனர். அதில் பாலமுருகனின் உடலை சொந்த ஊரான பம்மனேந்தல் கிராமத்துக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in