குருவப்பன்பேட்டையில் இயற்கை வேளாண் சாகுபடி பயிற்சி :

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள குருவப்பன்பேட்டையில் நடைபெற்ற  இயற்கை விவசாய பயிற்சியில் விவசாயிகளுக்கு ஜீவாமிர்தம்  வழங்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள குருவப்பன்பேட்டையில் நடைபெற்ற இயற்கை விவசாய பயிற்சியில் விவசாயிகளுக்கு ஜீவாமிர்தம் வழங்கப்பட்டது.
Updated on
1 min read

குறிஞ்சிப்பாடி வட்டாரம் குருவப்பன்பேட்டை கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்தல் குறித்து விவசாயிகளுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் பாலசுந்தரம் வரவேற்று பேசினார்.முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பரமணியன் முன்னிலை வகித்தார். வேளாண் அலுவலர் அனுசுயா இயற்கை விவசாயிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து விளக்கினார். குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் தலைமை தாங்கி ஒருங்கிணைந்த முறையில் கிராம மக்கள் அனைவரும் செயல்பட்டு முன்னோடி கிராமமாக உயர்த்த விவசாயிகளை கேட்டு கொண்டார்.மேலும் இயற்கை விவசாயம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்த தொடர்ந்து ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்தார். குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி ராகவேந்தர் இயற்கை முறையில் காலா நமக், மாப்பிள்ளை சம்பா, கொத்தமல்லி சம்பா, பூங்கார், கருப்பு கவுனி, குள்ள கார், கிச்சிலி சம்பா, காட்டு பொன்னி, அறுபதாம் குறுவை, வாசனை மாப்பிள்ளை சம்பா, சொர்ண மசூரி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபதி செய்து வெற்றிகரமாக சந்தை படுத்தும் தனது வயல் அனுபவங்கள் குறித்து விரிவாக விளக்கினார். மேலும் ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், பஞ்சகவ்யம், உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் தருணங்கள் குறித்தும் விளக்கினார். பயிற்சியில கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஜீவாமிர்தம்,பஞ்சகவ்யம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. முன்னோடி விவசாயி சிவராமசேது குருவப்பன்பேட்டை கிராமத்தில் இயற்கை விவசாயிகள் குழு அமைத்து பாரம்பரிய நெல் சாகுபடி செய்து சந்தை படுத்தும் அனுபவங்களை விளக்கினார். துணை வேளாண் அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை குறிஞ்சிப்பாடி வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரியாராணி, உதவி தொழில் நுட்ப மேலாளர் மனோஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

பல்வேறு கிராமங்களில் முன்னோடி விவசாயிகள் சாகுபடி செய்த 40-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து கருத்து காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in