முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா :

கோவை அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்டோர்.
கோவை அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 77-வது பிறந்தநாள் விழா கோவையில் நேற்று கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டு, ராஜீவ்காந்தியின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், கோவை அரசு மருத்துவ மனையில் நேற்று பிறந்த 20 குழந்தைகளுக்கு மாநகர் மாவட்டம் சார்பில், மாநில செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் தங்க மோதிரம் அணிவித்தார். மாநகர் மாவட்டத் தலைவர் கருப்பசாமி, ஹெச்.எம்.எஸ் தலைவர் ராஜாமணி, பொதுக்குழு உறுப்பினர் இருகூர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புறநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், காந்திபார்க் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் மார்பளவு வெண்கல சிலையை மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் திறந்து வைத்தார்.

வட்ட தலைவர் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் அழகுஜெயபால் கட்சிக் கொடியேற்றி னார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற விழாவில், 15 வேலம்பாளையத்தில் ‘நேரு பவன்’ என்ற புதிய அலுவலகத்தை அகில இந்திய காங்கிரஸ்கமிட்டி செயலர் சி.மெய்யப்பன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.திருப்பூர் ராஜ்பவன் அலுவலகத்தில் ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் மாவட்ட துணைத் தலைவர்கள் கோபால், ரத்தினமூர்த்தி மற்றும் மகிளா காங்கிரஸார் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in