கொல்லிமலை தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் ஆலோசனை :

கொல்லிமலை அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலைய மேம்பாடு குறித்து அதிகாரிகளுடன் நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆலோசனை நடத்தினார்.
கொல்லிமலை அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலைய மேம்பாடு குறித்து அதிகாரிகளுடன் நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆலோசனை நடத்தினார்.
Updated on
1 min read

கொல்லிமலை அரசு பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் நலன்கள் மற்றும் மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

கொல்லிமலை தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு, உலகதரத்திலான தொழிற்கல்வியை வழங்கி, அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான திறன் போட்டிகளில் வெற்றி பெறும் நிலையை உருவாக்க வேண்டும். 100 சதவீதம் தேர்ச்சி மற்றும் 100 சதவீதம் பணியமர்த்துதலை உறுதி செய்ய வேண்டும். தொழிற்தேர்வுகளில் கலந்துகொள்ளாத, தேர்ச்சிபெறாத மாணவர்களை கண்டறிந்து, சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சிபெறச் செய்ய வேண்டும்.

தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களை உள்ளுர் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பிரபல தொழில் நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று, நவீன தொழில் வளர்ச்சிகளை நேரடியாகக் காணச்செய்ய வேண்டும். போக்குவரத்து வசதி குறைவாக உள்ள பகுதி மாணவர்களுக்கு உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ராமசாமி, கொல்லிமலை அரசினர் பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜெகநாதன், மேலாண்மைக்குழு என்.தர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in