Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM
சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் சார்பில், பங்குச் சந்தை வர்த்தகம் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வரும் 28, 29 மற்றும் செப்.4 மற்றும் 5-ம் தேதிகளில் ஆன்லைன் மூலம் மாலை 6 மணி இரவு 9 மணி வரை நடைபெறும் இப்பயிற்சியில் சேர கட்டணம் ரூ.4,720. பங்குச் சந்தையில் எவ்வாறு முதலீடு செய்து பணம் ஈட்டுவது, எவ்வாறு வர்த்தகம் செய்வது, மியூச்சுவல் ஃபண்ட், பாண்டுகளில் முதலீடு செய்வது, ஊக வாணிபம், டெக்னிக்கல் அனாலிசிஸ், பங்குச் சந்தையில் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பன உள்ளிட்டவை குறித்து இப்பயிற்சியில் கற்றுத் தரப்படும். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இதுகுறித்து கூடுதல் விவரங்களை 73051 68118, 87544 63915, 91595 87689 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT