Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM

கரோனாவால் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி - கோயில் வாசலில் நடைபெற்ற திருமணங்கள் :

கரோனா பரவல் காரணமாக பக்தர்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில் களுக்குச் செல்லத் தடை விதிக்கப் பட்டுள்ளது. முகூர்த்த நாளான நேற்று கோயில்களில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்த மண மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் காலை முதலே மணமக்களும், உறவினர்களும் கூடினர். கோயிலுக்குள் செல்ல முடியாததால் மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வாசல்களில் மணமக்கள் தாலி கட்டி, மாலை மாற்றிக் கொண்டனர். திருமண வீட்டார் மற்றும் பக்தர்கள் கோயில்கள் முன் திரண்டதால் போலீஸார் அவர்களை அதிக நேரம் கூடாமல் அனுப்பி வைத் தனர். மேலும் வரலட்சுமி விரதம், பிரதோஷத்தையொட்டி மீனாட்சி அம்மன் உட்பட சிவன் கோயில்களில் நேற்று பெண் பக்தர்கள் கோயில் வாசல்களில் நின்று வழிபட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கோட்டை மாரி யம்மன் கோயில் வாசலில் உறவி னர்கள் சூழ மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். பழநி கோயிலிலும் இதேபோல கோயில் வாசலில் பலர் திருமணம் செய்து கொண்டனர். நேற்று ஒரே நாளில் திண்டுக்கல் மாவட் டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் கோயில் வாசலில் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x