திருச்சி மாவட்டத்தில் 99 இடங்களில் - இன்று கரோனா தடுப்பூசி முகாம் :

திருச்சி  மாவட்டத்தில் 99 இடங்களில் -  இன்று கரோனா தடுப்பூசி முகாம் :
Updated on
1 min read

திருச்சி மாநகரில் இன்று(ஆக.21) 35 இடங்களிலும், மாவட்டத்தில் 64 இடங்களிலும் என மொத்தம் 99 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. காலை 9.30 மணி முதல் நடைபெறும் இந்த முகாம்களில் மாநகரில் 13,000 பேருக்கும், புறநகரில் 21,740 பேருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.

மாநகரில் முகாம் நடைபெறும் இடங்கள்: ரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காஞ்சியம்மன் நடுநிலைப் பள்ளி, அகிலாண்டேஸ்வரி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி, திருவானைக்காவல் ஜெ.ஜெ.நகர் அங்கன்வாடி மையம், மேலச் சிந்தாமணி நியூ ஆக்ஸ்போர்டு பள்ளி, மலைக்கோட்டை அங்கன்வாடி மையம், பெரிய சவுராஸ்டிரா தெரு சதீஸ் பள்ளி, பெரிய கடை வீதி டிஇஎல்சி பள்ளி, அரியமங்கலம் லட்சுமி நர்சரி பள்ளி, இபி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, செந்தண்ணீர்புரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, காஜாபேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பொன்னேரிபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, மிலிட்டரி காலனி தங்கேஸ்வரி நகர் ஊராட்சி ஒன்றிய பள்ளி, சுப்பிரமணியபுரம் மாநகராட்சி பள்ளி, மன்னார்புரம் செயின்ட் மேரீஸ் பள்ளி, வயர்லெஸ் ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, கேகேநகர் அய்யப்ப நகர் பாரதி நூலகம்.

கருமண்டபம் ஓம் மாருதி பள்ளி, கிராப்பட்டி செயின்ட் தாமஸ் மெர்சி ஹோம், கெம்ஸ் டவுன் டிஇஎல்சி பள்ளி, பெரிய மிளகுபாறை ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளி, கன்டோன்மென்ட் வெஸ்ட்ரி பள்ளி, தென்னூர் மாநகராட்சி பள்ளி, ஆழ்வார்தோப்பு காயிதே மில்லத் பள்ளி, வண்ணாரப்பேட்டை சிஇ பள்ளி, உய்யக்கொண்டான் திருமலை ஆர்சி பள்ளி, குறத்தெரு மாநகராட்சி பள்ளி, தில்லைநகர் கிஆபெ விசுவநாதம் உயர்நிலைப் பள்ளி, உறையூர் எஸ்எம் உயர்நிலைப் பள்ளி, உறையூர் அரபிந்தோ பள்ளி, காட்டூர் பிலோமினாள் பள்ளி, அரியமங்கலம் காமராஜ் நகர் என்எஸ்பி பள்ளி, திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளி, மலைக்கோயில் நொச்சிவயல்புதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in