

சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஒன்றியக் குழு கூட்டத்தில் இருந்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றியக் குழுத் தலைவர் மல்லிகா வையாபுரி தலைமையில் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் நால்வரும், திமுக கவுன்சிலர்கள் நால்வரும் கலந்து கொண்டனர். ஒன்றியக்குழு கூட்டம் ஆரம்பித்ததும், திமுக-வை சேர்ந்த கவுன்சிலர்கள் சுசீலா, மலர்கொடி, அமுதா, சாந்தி நால்வரும், தலைவர் மல்லிகாவிடம், போதுமான மெஜாரிட்டி இல்லாததால், தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றனர்.
மேலும், எங்கள் வார்டுக்கு திட்டம் சார்ந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. அதிமுக கவுன்சிலர்கள் வார்டுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், திட்டப்பணி உள்பட பல்வேறு பணிகளில் முறைகேடு நடப்பதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறியபடி, நான்கு கவுன்சிலர்களும், ஒன்றியக் குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.