

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் முதுநிலை வரலாறு இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி க.மதுபாலாவுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுகைக்குட்பட்ட கல்லூரிகளுக்கான முதுநிலை வரலாறு இறுதித்தேர்வில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற முசிறி அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவி க.மதுபாலாவுக்கு டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் சார்பில் கல்வெட்டறிஞர் ஐராவதம் மகாதேவன் நினைவு அறக்கட்டளை பரிசு வழங்கப்பட்டது.
இந்த பரிசை கல்லூரி முதல்வர் கி.ராஜ்குமார் வழங்கினார். இந்த நிகழ்வில், கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ம.இரா.ராஜாரவீந்திரன், பேராசிரியர்கள் அர. அகிலா, லெ.சந்திரகாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.