கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு  :

கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு :

Published on

தி.மலை மாவட்டம் சேத்துப் பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் வசித்தவர் ஆரோக்கியசாமி மகன் சதீஷ் (15). இவர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.இவர், தனது நண்பர்களுடன், அதே பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று குளிக்க சென்றுள்ளார். கிணற்றின் உள்ளே ஒவ்வொருவராக குதித்த போது, கிணற்றின் ஆழமானப் பகுதியில் சதீஷ் சிக்கி கொண்டுள்ளார்.

இதையறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சேத்துப்பட்டு தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட பேராட்டத்துக்கு பிறகு உயிரிழந்த நிலையில் சதீஷின் உடலை மீட்டனர். இது குறித்து சேத்துப்பட்டு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in