அர்ச்சகர்களுக்கு பாராட்டு :

அர்ச்சகர்களுக்கு பாராட்டு :
Updated on
1 min read

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட 2 அர்ச்சகர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தருமத்துப்பட்டி காளியம்மன், பகவதியம்மன் கோயில்களுக்கு அர்ச்சகராக விக்ரம் என்பவரையும், சுப்பிரமணியர், விநாயகர் கோயில்களுக்கு அர்ச்சகராக கலையரசன் என்பவரையும் தமிழக அரசு நியமித்தது.

இவர்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பாராட்டு விழா நடந்தது. மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.முத்துச்சாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். அர்ச்சகர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பொருளாளர் வனஜா, மார்க்சிஸ்ட் ரெட்டியார்சத்திரம் ஒன்றியச் செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in