

தமிழக அரசு அகவிலைப்படியை முடக்கம் செய்ததை ரத்து செய்யக் கோரி பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட துணைத் தலைவர் பி.நீலமேகம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மகேஸ்வரன், ஆறுமுகம், விஜயராமு, பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் கி.ஆளவந்தார், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்டத் தலைவர் ராஜகுமாரன் உள்ளிட்டோர் பேசினர்.