

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் விநியோகிக்க, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 3,320 டன் கோதுமை திருநெல்வேலிக்கு கொண்டுவரப்பட்டது.
பொதுவிநியோக திட்டத்தின்கீழ் மக்களுக்கு வழங்குவதற்காக வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்களில் கோதுமை கொண்டுவரப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் மத்திய உணவு கழகத்தின் தொகுப் பிலிருந்து 3,320 டன் கோதுமை மூட்டைகள் சரக்கு ரயிலில் நேற்று திருநெல்வேலிக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கிருந்து புரத்திலுள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு இன்று முதல் கோதுமை மூட்டைகள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.