

திருப்பத்தூர் நகராட்சி சேர்மன் துரைசாமி தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (45). ஊதுவத்தி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் குடும்பத்தாருடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, பின்பக்க வாசல் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 15 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப்பொருட்கள், 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்றனர்.
இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நடராஜன் அளித்த புகாரின் பேரில்காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.