அபுதாபியில் தாயை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக மகள் புகார் :

அபுதாபியில் தாயை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக மகள் புகார் :
Updated on
1 min read

அபுதாபியில் உள்ள அலைன் பகுதியில் தனது தாயாரை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக, அவரது மகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

தேவகோட்டை ராம்நகரைச் சேர்ந்தவர் அருள்மேரி (40). குடும்ப கஷ்டம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச்சில் அபுதாபி நாட்டில் வீட்டு வேலைக்குச் சென்றார். அங்குள் சந்தோஷ் என்பவர் வீட்டில் பணிபுரிந்து வருகிறார். 16 மாதங்களாகியும் இதுவரை ஊதியம் வழங்கவில்லை. மேலும் அவரை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தி வருவதாக கூறப்படுகிறது. சமீபகா லமாக உடல்நலக்குறைவால் அரு ள்மேரி பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல் லவில்லை. இதையடுத்து தன்னை மீட்டு இந்தியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு, அங்குள்ளவர்கள் மூலம் ஊரில் உள்ள அவரது மகள் டயானாவுக்கு (20) தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது தாயாரை மீட்டு இந்தியா கொண்டுவர வேண் டுமென வலியுறுத்தி டயானா அவரது பாட்டி வியாகுலமேரியுடன் வந்து நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

சிவகங்கை அருகே சாலூரைச் சேர்ந்தவர் செல்லமுத்து (35). இவர் 2018 ஏப்ரல் மாதம் துபாய் நாட்டுக்கு வேலைக்கு சென்று கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தார். வீட்டுக்கு பணம் அனுப்பி வந்தநிலையில் திடீரென அவர் குறித்த தகவல் தெரியவில்லை. இதையடுத்து செல்லமுத்து குறித்த விபரத்தை அறிந்து தெரிவிக்குமாறு அவரது தாயார் கருப்பாயி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in