Published : 17 Aug 2021 03:16 AM
Last Updated : 17 Aug 2021 03:16 AM

அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கக் கோரி - அரசு, மின்வாரிய ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய அனைத்துத் தொழிற்சங்கத்தினர்.படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி/ கரூர்/ புதுக்கோட்டை/ நாகப்பட்டினம்/ பெரம்பலூர்/ அரியலூர்

அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கக் கோரி திருச்சி, கரூர், புதுக்கோட்டை, நாகை, பெரம் பலூர், அரியலூர் மாவட்டங்களில் அரசு ஊழியர், மின்வாரிய ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்களுக்கான அக விலைப்படி உயர்வை உடனே வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருச்சி மன்னார்புரம் பல்துறை அலுவலக வளாகத்தில் மாவட்டத் தலைவர் வளன்அரசு தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதேபோல, துணை இயக் குநர்(தொழுநோய்) அலுவலக வளாகத்தில் திருச்சி வட்ட கிளைத் தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளர் எம்.கென்னடி, துணைத் தலைவர் வை.மோகன், இணைச் செயலாளர் ஜி.இன்பராஜ், செயற்குழு உறுப்பினர் முகம்மது இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதே கோரிக்கையை வலி யுறுத்தி கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் து.சாமுவேல்பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மண்மங்கலம் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சக்திவேல் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, ஆட்சியர் அலுவ கம், வட்டாட்சியர் அலுவலகம், வருமானவரித் துறை அலுவலகம் மற்றும் மின்வாரிய அலுவலகங்கள் என கரூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 27 இடங்களில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், மின் வாரிய ஊழியர்களின் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்துக்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜபருல்லா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோன்று, மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் ப.அந்துவன்சேரல் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழ கன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ச.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதே கோரிக்கையை வலியு றுத்தி மின்வாரிய அனைத்துத் தொழிற்சங்கம் சார்பில் திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவ லகம் முன்பு நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்க ராஜன் தலைமை வகித்தார். மின் வாரியத்தின் சிஐடியு, டிபிஏஎஸ், டிஎன்இபிஇஎப், ஏடிபி, பொறி யாளர் சங்கம், பொறியாளர் கழகம், தொழிலாளர் சம்மேளனம், ஐஎன் டியுசி, ஏஇஎஸ்யு ஆகிய தொழிற் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

இதேபோல, ரங்கம், மன் னார்புரம், லால்குடி, தாத்தையங் கார்பேட்டை, முசிறி, மண்ணச் சநல்லூர், துறையூர், மணப்பாறை உட்பட மாவட்டம் முழுவதும் 50-க்கும் அதிகமான இடங்களில் மின்வாரிய தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் நான்கு சாலை பகுதியிலுள்ள மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவ லகம் அருகே சிஐடியு தொழிற் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் சின்னசாமி, பன்னீர்செல்வம், சித்ரா, பிரபு, நாராயணன், சுகுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் மின்வாரிய கிளை அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டப் பொருளாளர் கண்ணன் தலைமை வகித்தார். இதேபோல, கல்லங்குறிச்சி, ஏலாக்குறிச்சி, திருமானூர், திரும ழபாடி உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x