Published : 17 Aug 2021 03:16 AM
Last Updated : 17 Aug 2021 03:16 AM
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் திருப்பவித்ரோத்ஸவம் வரும் 18-ம் தேதி தொடங்கி, 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் யாகசாலை ஹோமம், வேத, இதிஹாஸ புராண, திவ்யப்ரபந்த பாராயணம், மாலையில் புறப்பாடு ஆகியவை நடைபெறுகின்றன. 21-ம் தேதி ஆவணி திருவோணம் அன்று எண்ணெய்க்காப்பு நடைபெறுகிறது. 24-ம் தேதி பூர்ணாஹுதி, சாற்றுமுறையுடன் விழா நிறைவுபெறுகிறது. வானமாமலைமடம் மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமைவகிக்கிறார்.
இதுபோல், திருக்குறுங்குடி குறுங்குடிவல்லித் தாயார் சமேத சுவாமி அழகியநம்பிராயர் கோயிலில் திருப்பவித்ரோத்ஸவ திருவிழா வரும் 19-ம் தேதி தொடங்கி வரும் 25-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT