சிறப்பாக பணியாற்றிய 78 பேருக்கு நற்சான்றிதழ் : தென்காசியில் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட்டது

தென்காசி ஐ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஆட்சியர் கோபால சுந்தரராஜ் நற்சான்றிதழ் வழங்கினார்.
தென்காசி ஐ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஆட்சியர் கோபால சுந்தரராஜ் நற்சான்றிதழ் வழங்கினார்.
Updated on
1 min read

தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் தென்காசி ஐ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தேசியக் கொடியேற்றி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சமாதான புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களையும் வானில் பறக்க விட்டார்.

கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியதற்காக செங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கும், தென்காசியில் உள்ள சாந்தி தனியார் மருத்துவமனைக்கும் நற்சான்று வழங்கப்பட்டது.

காவல்துறையைச் சேர்ந்த 15 பேர், உள்ளாட்சித் துறை தூய்மை பணியாளர்கள் 30 பேர், ஒரு உதவி மருத்துவர், கிராம சுகாதார செவிலியர்கள் 9 பேர், பொதுப்பணித்துறையில் 2 உதவிப் பொறியாளர்கள், 108 அவசர ஊர்தியில் பணியாற்றும் 2 மருத்துவ நுட்புநர்கள், அவசர கால ஊர்தி ஓட்டுநர் 2 பேர், மாவட்ட சித்த மருத்துவத்துறையில் சித்த மருத்துவர், மருந்தாளுநர், மருத்துவமனை பணியாளர் என 3 பேர், வருவாய்த்துறையில் 6 பேர், ஊரக வளர்ச்சித்துறையில் 3 பேர், ஊராட்சி செயலர் 3 பேர் என மொத்தம் 78 பேருக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக நற்சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

விழாவில், தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார், தென்காசி தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.பழனி, மாவட்ட எஸ்பி கிருஷ்ணராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, தென்காசி கோட்டாட்சியர் ராமசந்திரன், உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் சிவபத்மநாதன், செல்லத்துரை, தென்காசி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு தலைவர் ஷமீம் இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஊரக வளர்ச்சித்துறையில் 3 பேர், ஊராட்சி செயலர் 3 பேர் என மொத்தம் 78 பேருக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in