ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் - சுதந்திரப் போராட்ட தியாகிகள், குடும்பத்தினர் கவுரவிப்பு :

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில்  மாநில துணைத்தலைவர் இதயத்துல்லா பேசினார். அருகில்  மாநில செயலாளர் பிரியா,  மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன்.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் இதயத்துல்லா பேசினார். அருகில் மாநில செயலாளர் பிரியா, மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன்.
Updated on
1 min read

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட ஆய்வுக்கூட்டம் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் குடும்பத்தினரை கவுரவிக்கும் விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் மக்கள் ஜி. ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைத் தலைவருமான இதயத்துல்லா, மாநில செயலாளர் பிரியா ஆகியோர் பேசினர். கூட்டத்தில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்ப வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து 103 வயதான சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தியாகி எஸ்.கே.பரமசிவத்திற்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

முன்னதாக சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in