Published : 15 Aug 2021 03:27 AM
Last Updated : 15 Aug 2021 03:27 AM
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.மருதகுட்டி வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவு களில் இளம்முனைவர் மற்றும் முனைவர் பட்ட பதிவுக்கான தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளம்முனைவர் பட்டப்பதிவுக்கான தகுதித் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள முதுகலைப்பட்டம் முடித்த மாணவர்கள் தங்களது இறுதி மதிப்பெண் சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதுபோல், முனைவர் பட்டப் படிப்புக்கு முதுகலை மற்றும் இளம்முனைவர் பட்டம் படித்தவர்கள் தங்களுடைய இறுதி மதிப்பெண் சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான பாடப்பிரிவுகள், அடிப்படைத் தகுதிகள், கட்டண விவரங்கள், தகுதித்தேர்வு தேதி மற்றும் அனுமதி நெறிமுறைகளை http://www.msuniv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
NET/ SET/ JRF/ GATEதேர்ச்சி பெற்றவர்களுக்கு இத்தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தகுதித் தேர்வின் தேர்ச்சியானது 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். தகுதித் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள், இப்பல்கலைக்கழக இணைய தளத்தில் உள்ள ஆராய்ச்சிப் பிரிவு பகுதியின் இணையதள விண்ணப்பம் மூலமாக விண்ணப்பிக்கலாம். கட்டணம் ரூ.2 ஆயிரம். இணையதள விண்ணப்ப வாயில் திறக்கப்படும் நாள்- 17.8.2021, இணையதள விண்ணப்ப வாயில் மூடப்படும் நாள்- 31.8.2021. இணையதள வாயிலாக தேர்வு நடைபெறும் நாள்- 13.9.2021 மற்றும் 14.9.2021.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT