Published : 15 Aug 2021 03:27 AM
Last Updated : 15 Aug 2021 03:27 AM

மத்திய அரசு கல்வி நிறுவன உதவித்தொகை :

திருநெல்வேலி

திருநெல்வேலி ஆட்சியர் விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு கல்வி நிறுவனங் களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படும். தகுதியான மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகி அல்லது tngovtiischolarship@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கை அனுப்புவதன் மூலம், விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: இயக்குநர், பிற்படுத்தப் பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2வது தளம், சேப்பாக்கம்,சென்னை-5 தொலைபேசி எண்.044-28551462 .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x