Published : 15 Aug 2021 03:27 AM
Last Updated : 15 Aug 2021 03:27 AM

நெல்லை உட்பட 4 மாவட்டங்களிலும் - சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு : தீவிர ரோந்துப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார்

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான போலீஸார் நேற்று தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங் கோட்டை ஆயுதப்படை மைதா னத்திலும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகராட்சி அலுவலக வளாகத்திலும் சுதந்திர தினவிழா இன்று நடைபெறுகிறது. ஆயுதப் படை மைதானத்தில் கடந்த ஒருவாரமாக போலீஸார், ஆயுதப் படையினர் மற்றம் ஊர்க்காவல் படையினர் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். சுதந்திர தினவிழாவையொட்டி மாவட்டம் முழுக்க மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுதந்திரதினவிழா நடைபெறும் பகுதிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் உள்ளிட்ட ரயில் நிலையங் களில் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் உதவியுடன் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தென்காசி

தென்காசி ஐசிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெ றும் சுதந்திர தின விழாவில், ஆட்சியர் கோபால சுந்தரராஜ், தேசியக் கொடியேற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணிகளை எஸ்பி கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத் தில் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள னர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட முக்கிய அலுவலகங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்பநாய் படை பிரிவினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட எல்லைப்பகுதிகளில் 18 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுதந்திர தின விழா நடைபெறவுள்ள தூத்துக்குடி தருவை மைதானத்தில் நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் 110 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் சுதந்திர தின விழாவில் குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். கரோனா கட்டுப்பாடுகளால் விழாவில் பங்கேற்க பொதுமக்கள், பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. கலைநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தீவிர கண்காணிப்பு

ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதிகள் மற்றும் கடற்கரை சோதனை சாவடிகளில் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் நிலைய நுழைவு வாயில் கள் மற்றும் தண்டவாளங்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், களியக்காவிளை ஆகிய இடங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீஸார் கடந்த இரு நாட்களாக சோதனை நடத்தினர்.

மாவட்டம் முழுவதும் விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது. நேற்று ஒரே நாளில் சாலை விதிகளை மீறியதாக 2,800 பேருக்கு மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. களியக்காவிளை முதல் காவல் கிணறுவரையுள்ள சோதனைச் சாவடிகளிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x