‘தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்களுக்கு அழைப்பு’ :

‘தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்களுக்கு அழைப்பு’  :
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்க விருப்பம் உள்ள தொழிற்கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் நகர்புற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

அதன்படி, 2021-22 நிதியாண்டில் 200 பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், தோல் பயிற்சி, கைத்தறி, உணவு மற்றும் பானங்கள், மின்னணுவியல், குழாய் இணைப்பு பணி, தானியங்கி இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியை அளிக்க விருப்பம் உள்ள தொழிற் பயிற்சி நிறுவனங்கள், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், திருப்பத்தூர் மாவட்டம் என்ற முகவரிக்கு 10 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in