

சேலம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி பஜனைமட தெரு பேருந்து நிறுத்தம் பகுதியில் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று முன்தினம் (12-ம் தேதி) மர்ம நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, அதில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.
ஏடிஎம் இயந்திரம் உடைக்கும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள், மரம் நபரை சுற்றி வளைத்துப் பிடித்து, தம்மம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடம் விரைந்து வந்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
காவல் நிலையத்தில் அந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் சிசிடிவி கேமரா பதிவு மூலம் இளைஞரைத் தேடி வருகின்றனர்.