Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM

விழுப்புரத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு - உள்ளாட்சித் தேர்தல் ஆயத்தப் பணிகள் ஆய்வுக்கூட்டம் :

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஆயத்தப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

விழுப்புரம் மற்றும் கள்ளக் குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் களுக்கான உள்ளாட்சித் தேர்தல் பயிற்சி நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேசியது:

தேர்தல் மிகவும் கட்டுப்பாட் டுடனும், நடுநிலையுடனும், பாதுகாப்புடனும் நடைபெற வேண்டும். தேர்தல் குறித்த அனைத்து விவரங்களையும் முழுமையாக அறிந்திருக்க வேண் டும். தேர்தலை பொறுத்த வரையில் வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச்சாவடி பட்டி யல் தயாரித்தல், தேர்தல் கண் காணிப்பு பணிகள், தேர்தல் நன்னடத்தை விதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் உள்ளடங் கியுள்ளது.

அளிக்கப்படும் பயிற்சிகளை முறையாக அறிந்து கொண்டு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றார்

தொடர்ந்து விழுப்புரம் மற்றும்கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெளி யிடப்பட்ட இறுதி வாக்குச்சாவடி பட்டியல் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் மற்றும் தேர்தல் முதற்கட்ட ஆயத் தப்பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

உள்ளாட்சித் தேர்தல் நடத்து வதற்கு தேவையான உரிய படிவங் கள் மற்றும் அவசிய பொருட்கள் தயார் நிலையில் வைத்திருத்தல், வேட்பு மனு பரிசீலனை உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி, ஆட்சியர்கள் மோகன், ஸ்ரீதர்,எஸ்பிக்கள் நாதா, ஜியாவுல் ஹக், மாநில தேர்தல் ஆணைய முதன்மை தேர்தல் அலுவலர்கள் அருண்மணி, தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x