Published : 12 Aug 2021 03:20 AM
Last Updated : 12 Aug 2021 03:20 AM

மேட்டூர் கிழக்குக்கரை பாசன விவசாயிகள் சங்க ஆண்டு விழா :

குமாரபாளையத்தில் மேட்டூர் கிழக்குக்கரை முறைநீர் பாசன விவசாயிகள் சங்க ஆண்டு விழா நடைபெற்றது.

நாமக்கல்

குமாரபாளையத்தில் மேட்டூர் கிழக்குக்கரை முறைநீர் பாசன விவசாயிகள் சங்க 20-வது ஆண்டு விழா நடைபெற்றது.

சங்கத் தலைவர் கொமாரசாமி தலைமை வகித்தார். செயலாளர் அத்தியண்ணன் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் பேசியது:

வழக்கமாக கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடும் நாட்களுக்கு முன்பாகவே இந்த ஆண்டு திறக்கப்பட்டு விட்டது. விவசாயிகள் உடனே தங்கள் நிலங்களில் பயிரிட்டு டிசம்பர் மாதத்துக்குள் மகசூல் பெறும் வகையில் பணிபுரிந்து பயன்பெற வேண்டும். பிரதான வாய்க்கால், கிளை வாய்க்கால்கள் அனைத்திலும் கடைமடை பகுதி வரை தண்ணீர் பாயும் வகையில் வாய்க்கால் பகுதி முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

சங்ககிரி துணை வேளாண்மை அலுவலர் முரளிதரன், பொதுப்பணித்துறை துணை பொறியாளர் முருகேசன், நிர்வாகிகள் காந்திநாச்சிமுத்து, குருநாதன், புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x