வங்கி கணக்கில் இருந்து அஞ்சலகம் மூலம் - 3 நாட்களுக்கு ஆதார் மூலம் பணம் பட்டுவாடா :

வங்கி கணக்கில் இருந்து அஞ்சலகம் மூலம்  -  3 நாட்களுக்கு ஆதார் மூலம் பணம் பட்டுவாடா :
Updated on
1 min read

திருநெல்வேலி முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவல கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அஞ்சல் இயக்குநரகத்தின் ஆணைப்படி தேசிய அளவில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஆதார் மூலம் பிறவங்கிகளின் கணக்கில் இருந்து பணம் எடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணுடன் இணைக்கப் பட்ட எந்தவொரு வங்கி கணக் கில் இருந்தும் வேறு எந்த ஆவணங் களும் இல்லாமல், ஆதார் எண்ணை மட்டுமே பயன்படுத்தி தபால் அலுவலக த்திலோ அல்லது தபால்காரர் மூலமாகவோ பணம் பெறமுடியும்.

தற்போது விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்டத்தின்கீழ் 9.75 கோடி விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

விவசாய சங்கத்தில் பதிவு பெற்ற பயனாளிகள், மாத ஓய்வூதியம், நூறுநாள் திட்ட ஊதியம், அரசின் பிற நேரடி மானியங்கள் பெறுபவர்கள், தொலைவில் உள்ள வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு சென்று சிரமப்படத் தேவையில்லை. அல்லது வங்கி முகவர்கள் வரும் நாள்வரை காத்திருக்க தேவையி ல்லை. தங்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தங்கள் பகுதி தபால்காரரை அணுகி ஆதார் மூலம், ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in