கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - 5,015 விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாய சான்றுகள் :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் -  5,015 விவசாயிகளுக்கு  சிறு, குறு விவசாய சான்றுகள் :
Updated on
1 min read

பிரதமரின் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மானிய முறையில் சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது. இந்த மானியத்தைப் பெறுவதற்கும் அரசின் பிற வேளாண் சார் சலுகைகளை பெறுவதற்கும் சிறு, குறு விவசாய சான்று அவசியம்.

இதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த மாதம் 28-ம் தேதி முதல்சிறு, குறு விவசாய சான்றுவழங்கும் சிறப்பு முகாம்கள்அனைத்து வருவாய் ஆய்வாளர்அலுவலகங்கள் மற்றும் மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றன. பெறப்பட்டவிண்ணப்பங்கள் இணையம்வழியாக பதிவேற்றம் செய்யப் பட்டு, முறையான ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் சான்றிதழ் வழங்கினார். இம்முகாம் வாயிலாக 5,015 சிறு,குறு விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது

அதன்படி சின்னசேலம் வட்டத்தில் 1,126 விவசாயிகள், கள்ளக்குறிச்சி வட்டத்தில் 973 விவசாயிகள், சங்கராபுரம் வட்டத்தில் 1,391 விவசாயிகள், திருக்கோவிலூர் வட்டத்தில் 552 விவசாயிகள், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 700 விவசாயிகள், கல்வராயன்மலை வட்டத்தில் 273 விவசாயிகள் என மொத்தம் 5,015 விவசாயிகளுக்கு சிறு,குறு விவசாய சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 472 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in