

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து மத்திய மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ரூ.360 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 150 மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. அதையொட்டி மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22 மருத்துவத் துறைகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதிகள், அறுவை சிகிச்சை அரங்குகள், மருத்துவர்கள் எண்ணிக்கை, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது ஆகியவை குறித்து தேசிய மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள் உடல் கூறு மருத்துவ சிகிச்சைப் பிரிவு நிபுணர் மல்லிகார்ஜுனா, எலும்பு சிகிச்சை மருத்துவ நிபுணர் விபின் சர்மா ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் மருத்துவமனையிலும் ஆய்வு செய்தனர்.
அப்போது டீன் சங்குமணி மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.