

தேனி மாவட்டத்தில் கரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம் கடந்த முதல் தேதியில் இருந்து 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக பள்ளி மாணவ, மாணவியருக்கு இணையவழியில் ஓவியம், போஸ்டர் வடிவமைப்பு, ஸ்லோகன் போட்டிகள் நடந்தது.
தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் க.வீ.முரளிதரன் பரிசுகளை வழங்கினார்.