

தேனி அருகே ஆதிபட்டி சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன் (27). மொபைல் கடையில் வேலை பார்த்து வந்தார். மனைவி ஜெயப்பிரியாவுடன் (21) போடிக்கு இருசக்கர வாக னத்தில் சென்றார்.
கோடாங்கிபட்டி அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில் அருண்பாண்டியன் அதே இடத்தில் இறந்தார். பலத்த காயமடைந்த ஜெயப்பிரியா, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பழனிசெட்டிபட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.