திருப்பத்தூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை - அம்பலூர் பாலாறு-காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு : ரயில் போக்குவரத்து தாமதம்-வெள்ளத்தால் விவசாய நிலங்கள் பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாலாற்றில் நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. அடுத்த படம்: ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் மழைநீரில் மூழ்கியுள்ள தண்டவாளங்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாலாற்றில் நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. அடுத்த படம்: ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் மழைநீரில் மூழ்கியுள்ள தண்டவாளங்கள்.
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, அம்பலூர் பாலாறு, காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜோலார்பேட்டை ரயில் நிலை யத்தின் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப் பத்தூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி பரவலான மழை பதிவானது. ஒரு சில இடங்களில் நேற்று அதிகாலை 3 மணிக்குத் தொடங்கி காலை 7 மணி வரையும் கன மழை பதிவானது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 8.2, ஆற்காட்டில் 19.2, காவேரிப்பாக்கத்தில் 25, சோளிங்கரில் 7, வாலாஜாவில் 37.2, திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 57, ஆம்பூரில் அதிகபட்ச அளவாக 101.5, ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதியில் 61.8, நாட்றாம் பள்ளியில் 62.4, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 88, வாணியம்பாடியில் 86, திருப்பத்தூர் நகரில் 11.5 மி.மீ மழையும், வேலூர் மாவட்டத்தில் குடியாத்தத்தில் 18.4, காட்பாடியில் 15.4, மேல் ஆலத்தூரில் 49.8, பொன்னையில் 25.2, வேலூரில் 3, அம்முண்டி வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 7.2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளன.

ரயில்கள் தாமதம்

ஜோலார்பேட்டை ரயில் நிலைய தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் சரக்கு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும், சென்னையில் இருந்து சேலம் மற்றும் பெங்களூருவுக்கு வந்து செல்லும் ரயில்கள் 1,2 மற்றும் 5-வது நடை மேடை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால், சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ரயில்கள் சென்றன.

ஏலகிரி மலையில் மண் சரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அம்பலூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதேபோல், வாணியம் பாடி மேட்டுப்பாளையம் பாலாற்று பாலத்தை வெள்ள நீர் கடந்து சென்றது.

பொதுமக்கள் சாலை மறியல்

காட்டாற்று வெள்ளம்

தோல் கழிவுநீர் கலப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in