

திருச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் உயிரிழந்தார்.
மதுரை கோச்சடை அசோக் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (50). இவர் வில்லிப்புத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து வந்தார். இவர் நேற்று திருச்சியிலிருந்து மதுரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். திருச்சியை அடுத்த வளநாடு வலசுபட்டி பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது. இதில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.