ஆசிரிய நன்மாமணி விருது பெற விண்ணப்பிக்கலாம் :

ஆசிரிய நன்மாமணி விருது பெற விண்ணப்பிக்கலாம் :
Updated on
1 min read

ஆசிரிய நன்மாமணி விருது பெற விண்ணப்பிக்கலாம் என கரூர் திருக்குறள் பேரவைச் செயலாளர் மேலை பழநியப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது: செப்.5-ம் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி, கரூர் திருக்குறள் பேரவை சார்பில் இருகட்டமாக ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் புரவலர்கள் துணையுடன் ஓய்வுபெற்ற இரு ஆசிரியர்கள், பணியில் உள்ள இரு ஆசிரியர்கள் என 4 பேருக்கு ஆசிரிய நன்மாமணி விருது வழங்கப்பட உள்ளது. இதில், தலா ரூ.5,000 பண முடிப்புடன் சிறப்பு விருந்தினர் மூலம் விருது வழங்கப்படும்.

ஆசிரியர்களுடைய கற்பித்தல் தந்த தேர்ச்சி, பள்ளி கட்டமைப்பில் பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எனவே, விருது பெற விண்ணப்பிப்பவர்கள் தக்க சான்றுகள், பரிந்துரை, இரு புகைப்படத்துடன் ஆக.15-ம் தேதிக்குள் “திருக்குறள் பேரவைச் செயலாளர், மேலை பழநியப்பன், 72, சீனிவாசபுரம், கரூர் 639 001” என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

ஏற்கெனவே திருக்குறள் பேரவை, மெஜஸ்டிக் லயன் சங்கம் அறிவித்த ஆசிரியர் நன்மணி விருதுக்கும் ஆக.15-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in