

வாழப்பாடி அருகே கடையின் பின்பக்க கதவை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வாழப்பாடி அடுத்த பேளூரைச் சேர்ந்தவர் முகமது அனஷ் (35). இவர் அப்பகுதியில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
அதேபோல, வாழப்பாடி-தம்மம்பட்டி சாலையில் உள்ள சலூன் கடையின் மேற்கூரையை பிரித்து கடையில் இருந்து ரூ.500 ரொக்கத்தை மர்ம நபர் திருடியது தெரிந்தது. மேலும், அதே பகுதியில் உள்ள செருப்புக் கடை உள்ளிட்ட அருகருகே இருந்த 3 கடைகளின் மேற்கூரைகள் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த கடைகளில் பணம் இல்லாததால் திருட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பணம், நகை திருட்டு
மேலும், பீரோவில் இருந்த ரூ.7.5 லட்சம் ரொக்க பணம் மற்றும் 4 பவுன் நகை, பட்டுப்புடவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக கெங்கவல்லி போலீஸார் விசாரிக்கின்றனர்.