முகநூலில் அவதூறு பரப்பிய இளைஞர் கைது :

முகநூலில் அவதூறு பரப்பிய இளைஞர் கைது :

Published on

முகநூலில் அவதூறு பரப்பிய இளைஞரை சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய் தனர்.

திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலையைச் சேர்ந்தவர் மாரிமுத்து (34). மாற்றுத் திறனாளியான இவர் அப்பகுதியில் மெடிக்கல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவரது மெடிக்கலில் போதை ஊசி, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக, அந்தக் கடையின் புகைப்படத்துடன் முகநூல் பக்கத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து எஸ்.பி பா.மூர்த்தியிடம் மாரிமுத்து புகார் அளித்தார். எஸ்.பி உத்தரவின்பேரில் சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் தலைமையிலான போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பியவர், அதே ஊரைச் சேர்ந்த ராமு மகன் மணிகண்டன் (34) என்பதும், போலி ஐ.டி.யில் அவர் அவதூறு பரப்பியதும் தெரியவந்தது.

முன்விரோதம் காரணமாக அவதூறு பரப்பிய அவரை பேட்டைவாய்த்தலை போலீஸார் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in