

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் விதிகளை மீறிய 32 தனியார் பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் உரி மையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறல் தொடர்ந்தால் பேருந்து வழித்தட உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.