

எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பருத்தி ஏலம் போனது.
கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் நெடுங்குளம், சென்றயானூர், பாலிருச்சம்பாளையம், காவேரிப்பட்டி, தேவூர், கோனேரிப்பட்டி, கொட்டாயூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 700 மூட்டை பருத்திகள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது.
ஏலத்தில் சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். பிடிரகம் பருத்தி குவிண்டால் ரூ.7,299 முதல் ரூ.7,856 வரை ஏலம் போனது. விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போனது.