கரூர் மாவட்டத்தில் - கரோனா விழிப்புணர்வு வாசகங்களுடன் ரேஷன் கார்டு பாதுகாப்பு உறை வழங்கல் :

கரூர் தாந்தோணிமலை ரேஷன் கடையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு மூதாட்டிக்கு ரேஷன் கார்டுக்கான பாதுகாப்பு உறையை வழங்குகிறார் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர். (உள்படம்) ரேஷன் கார்டு பாதுகாப்பு உறை.
கரூர் தாந்தோணிமலை ரேஷன் கடையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு மூதாட்டிக்கு ரேஷன் கார்டுக்கான பாதுகாப்பு உறையை வழங்குகிறார் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர். (உள்படம்) ரேஷன் கார்டு பாதுகாப்பு உறை.
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தில் கரோனா ஒரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியின் 4-ம் நாளான நேற்று மாவட்ட வழங்கல் துறை சார்பாக மாவட்டத் தில் உள்ள 3.25 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா விழிப்புணர்வு வாசகங்கள், படங்கள் அச்சிடப்பட்ட பாதுகாப்பு உறை(பவுச்) வழங்கும் நிகழ்ச்சி தாந்தோணிமலை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், ரேஷன்கார்டுதாரர்களுக்கு, ஸ்மார்ட் ரேஷன்கார்டுகளை பாது காப்பாக வைத்துக் கொள்வதற்காக உறைகளை(பவுச்) வழங்கிப் பேசி னார். இந்த பாதுகாப்பு உறையில் கரோனா விழிப்புணர்வு வாசகங் கள், படங்கள் இடம் பெற்றுள்ளன.

மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், கோட்டாட்சியர் பால சுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, வட்டாட்சியர் செந்தில்குமார் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, அரவக் குறிச்சி வட்டம் ஆண்டிப்பட்டி கோட்டை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் வட்டாரப் போக்குவரத்துறை சார்பில் வாகன ஓட்டிகள் கரோனா தடுப்பு உறுதிமொழி எடுத்தல், வாகனங் களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லை(ஸ்டிக்கர்) ஓட்டுதல், விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

இதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆனந்தன், அரவக் குறிச்சி வட்டாட்சியர் பன்னீர் செல்வம், போக்குவரத்து ஆய்வா ளர்கள் சரவணன், வேலுமணி, சுங்கச்சாவடி மேலாளர் கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in