கல்விக் கட்டணச் சலுகை கோரி : ஆட்சியரிடம் மாணவர்கள் மனு :

கல்விக் கட்டணச் சலுகை கோரி : ஆட்சியரிடம் மாணவர்கள் மனு :
Updated on
1 min read

கல்விக் கட்டணச் சலுகை கோரி, சேலம் ஆட்சியரிடம் தனியார் பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை பெரிய எழுத்துக்கார தெருவில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியாகவும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தனியார் வகுப்புகளாகவும் செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் கடந்த 2020-21-ம் ஆண்டில் பிளஸ் 2 வகுப்பில் 150 மாணவர்கள் படித்தனர். தற்போது, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பிளஸ் 2 முடித்த மாணவர்களிடம் ரூ.7,500 கல்விக் கட்டணம் செலுத்த பள்ளி நிர்வாகம் வலியுறுத்தி வருவதோடு, கட்டணம் செலுத்தினால் மட்டுமே மாற்றுச்சான்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பெற்றோருடன் வந்த அப்பள்ளி பிளஸ் 2 முடித்த மாணவர்கள், ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில், ‘கல்விக் கட்டணச் சலுகை வழங்க வேண்டும். மேலும், மாற்றுச்சான்றிதழை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in