இளங்குமரனார் நினைவேந்தல் நிகழ்ச்சி :

இளங்குமரனார் நினைவேந்தல் நிகழ்ச்சி :
Updated on
1 min read

அண்மையில் உயிர்நீத்த மூத்த தமிழறிஞர் ரா.இளங்குமரனார் நினைவேந்தல் நிகழ்ச்சி, படத் திறப்பு விழா, திருச்சி கன்டோன்மென்ட்டிலுள்ள தூய பவுல் இறையியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

பாவாணர் தமிழியக்கத் தலைவர் கு.திருமாறன் தலைமை வகித்தார். செயலாளர் புலவர் தமிழழகன் முன்னிலை வகித்தார்.

தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி அதிபர் பாதிரியார் அமுதன் அடிகள், சமூக சிந்தனை உயிர்ப்பியக்கத்தின் தலைவர் ம.செல்வராசு, திருக்குறள் கல்வி மையத் தலைவர் முருகானந்தம், தமிழ் கலை இலக்கியப் பேரவை நடுவன்குழு உறுப்பினர் நா.ராசாரகுநாதன், மணவை திருக்குறள் பயிற்றக ஒருங்கிணைப்பாளர் புலவர் நாவை.சிவம், பைந்தமிழ் இயக்கத்தின் புலவர் தமிழாளன், செண்பகத் தமிழ் அரங்கு பொறுப்பாளர் ராச.இளங்கோவன், அறவாழி, ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டு ரா.இளங்குமரனார் உருவப் படத்தை திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அவரது தமிழ் பணிகள் குறித்தும் பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in