பைக் விபத்தில் ஆசிரியர் மரணம் :

பைக் விபத்தில் ஆசிரியர் மரணம் :
Updated on
1 min read

திருநெல்வேலியில் இரும்பு கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் எபநேசர் சாமுவேல் (49) என்பவர் உயிரிழந்தார்.

பாளையங்கோட்டை மிலிட்டரிலைனை சேர்ந்தவர் எபநேசர் சாமுவேல். நாங்குநேரியிலுள்ள பள்ளியொன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். தாழையூத்தில் நேற்று முன்தினம் இரவில்நடைபெற்ற ஜெபக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இரவு 2 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே வந்தபோது திடீரென்று நிலைதடுமாறி சாலையோரம் இருந்த இரும்பு கம்பத்தில் அவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமைடந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். திருநெல்வேலி மாநகர விபத்து தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in