காவாலக்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி - சாலையில் நெல்லை கொட்டி வைத்துள்ள விவசாயிகள் :

காவாலக்குடியில் சாலையில் விவசாயிகள் கொட்டி வைத்துள்ள நெல் குவியல்.
காவாலக்குடியில் சாலையில் விவசாயிகள் கொட்டி வைத்துள்ள நெல் குவியல்.
Updated on
1 min read

காவாலக்குடி கிராமத்தில் அரசின் நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் சாலையில் நெல்லை கொட்டி வைத்துள்ளனர்.

சேத்தியாத்தோப்பு அருகே காவாலக்குடி கிராமத்தில் தற்போது குறுவை அறுவடை பணி தொடங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடை பருவத்தில் சராசரியாக 30 ஆயிரம் மூட்டைகளை அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். தற்போது குறுவையில் சுமார் 40 ஆயிரம் நெல் மூட்டைகள் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

தற்போது அறுவடை தொடங்கியுள்ள நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 10 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் சாலைகளில் கொட்டி வைத்துள்ளனர். மழை பெய்து நெல் மூட்டைகள் சேதமடையும் முன்பு இப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுவரை அப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விரைவில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in