கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் - நீதித்துறை உதவியாளர் தேர்வில் 12 ஆயிரம் பேர் பங்கேற்பு :

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில்   -  நீதித்துறை உதவியாளர்  தேர்வில் 12 ஆயிரம் பேர் பங்கேற்பு :
Updated on
1 min read

சென்னை உயர்நீதிமன்ற உத்த ரவின்படி நீதித்துறை அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கெங் கராம்பாளையம், கீழக்கொந்தை, அய்யங்கோவில்பட்டு, விழுப்பு ரம், கப்பியாம்புலியூர், உலகளாம் பூண்டி, தும்பூர் உள்ளிட்ட இடங்க ளில் உள்ள அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் என 13 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கி பகல் 12 மணி வரை ஒரு மணி நேரம் நடந்த இத்தேர்வை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

கடலூர் மாவட்டத்தில் நீதித்துறை அலுவலக உதவியாளர் எழுத்துத்தேர்வை 7,999 பேர் நேற்று எழுதினர். இவர்களுக்கான தேர்வு கடலூரில் உள்ள தனியார் கல்லூரி, பள்ளிகள் உள்ளிட்ட 11 மையங்களில் நடைபெற்றது.

தொடர்ந்து, இன்று (ஞாயிற் றுக்கிழமை) சுகாதார பணியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in