புறக்கணிக்கப்பட்ட ஊராட்சி தலைவர் குடும்பம் சொந்த சமூகத்தினருடன் சேர்த்து வைப்பு :

புறக்கணிக்கப்பட்ட ஊராட்சி தலைவர் குடும்பம்  சொந்த சமூகத்தினருடன் சேர்த்து வைப்பு :
Updated on
1 min read

இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூரில் பல்வேறு சமூகத்தினர் வசிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெருமாள் ஊராட்சித் தலைவராக உள்ளார். இவர் ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சிலர் எங்கள் குடும்பத்தையும், எனக்கு ஆதரவாக இருக்கும் 12 குடும்பங்களையும் புறக்கணித்துள்ளனர். எங்களை புறக்கணிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் தெரிவித்தார்.

ஆட்சியர் உத்தரவில் சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் முத்துக்கழுவன் தலைமையில் சமாதானக் கூட்டம் நேற்று நடந்தது. தமிழரசி எம்எல்ஏ, டிஎஸ்பி பால்பாண்டி, வட்டாட்சியர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் ஊராட்சித் தலைவர் உட்பட 13 குடும்பங்களையும் ஒன்று சேர்த்து வரி வசூலித்து கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in